சமர்ப்பணம்
இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோயால் 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந் நினைவகத்தினூடாக எம்மை விட்டுப்பிரிந்தோரை, இவ் எண்ணிக்கைகளுக்கு அப்பால் நினைவு கூற முயல்கிறோம்; இவர்கள் பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்; வாழ்க்கைத் துணைகள், உடன்பிறப்புகள், பெற்றோர், குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள்.
இலங்கை கோவிட்-19 நினைவகத்தில் உங்கள் மறைந்த உறவினர்களின் தகவல்களைச் சேர்க்க விரும்பினால் இந்தப் படிவத்தை நிரப்பவும். இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
படிவத்தை நிரப்புவதற்கு முன், இவற்றைத் தயாராக வைத்திருங்கள்: தகவலைச் சரிபார்க்கக்கூடிய ஆவணம் (இறப்புச் சான்றிதழ் அல்லது இரங்கல் அறிவிப்பு), மேலும் அந்த நபரின் வயது, பாலினம், இறந்த திகதி மற்றும் சொந்த ஊர். பெயரும் புகைப்படமும் விருப்பத்தேர்வானவை; நீங்கள் கேட்டால் மட்டுமே பெயர் காட்டப்படும்.