சமர்ப்பணம்

இலங்கையில், கோவிட்-19 தொற்றுநோயால் இன்றுவரை 15,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந் நினைவகத்தினூடாக எம்மை விட்டுப்பிரிந்தோரை, இவ் எண்ணிக்கைகளுக்கு அப்பால் நினைவு கூற முயல்கிறோம்; இவர்கள் பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்; வாழ்க்கைத் துணைகள், உடன்பிறப்புகள், பெற்றோர், குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள்.

இலங்கை கோவிட் -19 நினைவகத்தில் உங்கள் மறைந்த உறவினர்களின் தகவல்களைச் சேர்க்க விரும்பினால் இந்தப் படிவத்தை நிரப்பவும். இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்

  • நான் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினராவேன் அல்லது உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அவர்கள் சார்பாக இதை சமர்ப்பிப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியுள்ளனர் என்பதை நான் உறுதி செய்கின்றேன்.
  • நான் சமர்ப்பிக்கும் தகவலை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன (உதாரணமாக: இறப்புச் சான்றிதழ் அல்லது மரண அறிவித்தல் போன்ற ஆவணங்கள்)
  • நான் சமர்ப்பித்த தகவலைச் சரிபார்க்கும் நோக்கத்தில் இந்தத் தரவைச் சேமித்துச் செயலாக்க இலங்கை கோவிட் -19 நினைவக குழுவை அனுமதிக்கிறேன்.