அணுகுமுறை

இந்நினைவகத்தை நாம் செய்த விதம்

இந்நினைவுச் சின்னத்திற்கான யோசனை, இறப்பு மற்றும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இலங்கை அரசாங்கத்தின் கோவிட்-19 நோயால் இறந்தவர்களின் பதிவு மற்றும் அறிக்கை குறைவடடையத் தொடங்கிய கட்டத்தில் முன்மொழியப்பட்டது.

தொற்றுநோயின் ஆரம்பத்தில் அரசாங்க ஊடக வெளியீடுகள் ஒவ்வொரு நாளும் இறந்தவர்களில் சிலரின் வயது, பாலினம், சொந்த ஊர், இறப்பிற்கான காரணங்கள் என்பவற்றை வழங்கியிருந்தாலும், ஜூன் 2021 மட்டில், இத்தகவல்கள் வெறும் இலக்கங்களுக்குள் அடக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு இழப்பையும் ஒரு தனிநபராக அடையாளம் காண முடியாத நிலமைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். இதன் காரணமாக, ஓரளவு பிரசித்தமானவர்கள் மற்றும் சில சுகாதார ஊழியர்களைத் தவிர, மற்றைய இறப்புக்களின் எண்ணிக்கை ஓர் எண்ணிக்கையாகவே நின்றுவிட்டன.

நினைவுச்சின்னத்திற்கான எமது அணுகுமுறையானது, இழந்தவர்கள் இவ்விலக்கங்களுக்கு அப்பாட்பட்டவர்கள் என்பதை காட்டுவதும், அதே வகையில் இவற்றை ஓர் மூலத்திற்கு சுட்டிக்காட்ட முடியும் என்பதை உறுதிப்படுத்துவதுமாகும்.

முதற் கட்டமாக, இவ்வாறான பொதுத் தகவல் பெறும் மூலங்களிலிருந்த தகவல்களைப் பயன்படுத்தி ஒரு தரவுத்தளத்தை உருவாக்கினோம்:

இவ்வாதாரங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து கூறுகளையும் கொண்டு, ஒவ்வொரு இறப்பையும் ஒரு தனி நபரின் இழப்பாக, எம்மால் சித்தரிக்க முடிந்தது. அவர்களின் சொந்த இடம், வயது, பாலினம், அவர்கள் இறந்த இடம் மற்றும் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்த அவர்களின் மரணத்திற்கான காரணம் போன்றவற்றை பதிவு செய்யக்கூடியதாக அமைந்தது. சிறைச்சாலைகளில் தொற்றினால் இறந்தவர்களையும் நாம் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

இந்நினைவகம் ஒரு நபரின் வயது, பாலினம், இறந்த திகதி மற்றும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை மட்டும் சுட்டிக்காட்டுவதாக இருந்தாலும், மேலதிக விபரங்கள் எமது தன்னார்வலர்களால் தரவுத்தளத்தில் கைமுறையாக உள்ளிடப்பட்டு, பொது மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?

இலங்கையில் கோவிட்-19 நோயால் மரணித்தவர்களைப் பற்றி பொதுவில் கிடைக்கும் விவரங்களின் அளவு கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது, இது நாட்டின் கோவிட்-19 இறப்புகளில் சுமார் 5% மட்டுமேயாகும்.

இறந்த இன்னும் பலரை நினைவுகூர, எங்களுக்கு தற்போதைய ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட ஆதரவும், பங்களிப்பும் அவசியமாகும்.

இவையுள் அடங்குபவை:

  • நினைவகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களைச் சேர்க்க விரும்பும், மக்களிடமிருந்து பெறப்படும் சமர்ப்பனங்கள்.
  • இலங்கையில் கோவிட்-19 நோயால் இறந்தவர்களைப் பற்றிய மேலதிக விபரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தல்.
  • ஊடகவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அவற்றை அடையாளம் காண மற்றும்/அல்லது அணுகக்கூடிய பிற ஆர்வமுள்ள குடிமக்களிடமிருந்து தகவல் ஆதாரங்கள்.
  • நினைவுகூரப்பட்டவர்கள் பால் ரீதியாகவோ வேறு வகையிலோ தவறாக சித்தரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, சமூகத்தால் இயக்கப்படும் தரவு; இது குடும்பங்கள் அல்லது அன்புக்குரியவர்களின் ஒப்புதலுடன் பிற்பட்ட காலத்தில் பெயரிடவும் வழிவகுக்கக்கூடும்.