எம்மைப்பற்றி

நினைவகத்தைப் பற்றிய விபரங்கள்

இந்நினைவுச்சின்னம் இலங்கையில் கோவிட்-19 இனால் உயிர் இழந்தவர்களை கௌரவிக்கிறது.

இப்பெயர்கள் வெறும் எண்கள் அல்ல! இந்நினைவுச்சின்னம் தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புக்களின் உண்மையான தீவிரத்தன்மையை விளக்குவதோடு மட்டுமல்லாமல், இவை ஒவ்வொரு நாளின் முடிவிலும் அறிவிக்கப்படும் வெறும் புள்ளிவிபரங்களல்ல என்பதை நினைவூட்டுகிறது எனவும் நம்புகிறோம்.

இம்முயற்சியானது இவ்விழப்புகளுடன் வாழ வேண்டியவர்களுக்கோர் ஆறுதலாகவும், இத்தொற்றுநோயிற்கான அரசின் பதிலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட, சமூகங்கள் மற்றும் மக்கள் தொகைகளுக்கோர் வெளிச்சமாகவும் அமையுமென நாம் நம்புகிறோம்.

பங்களிப்பாளர்கள்

இந்நினைவகம் பல் தலைமுறை தன்னார்வலர்களால் முனையப்பட்டது.

இணையதளம் கவீன் ரோட்ரிகோவினால் வடிவமைக்கப்பட்டது. தரவு மற்றும் இணையதளம் MIT யின் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள திறந்த மூல மென்பொருளாகும்.

மலர்ச்சின்னம் திலினி பெரேராவினால் உருவாக்கப்பட்டது.

இச்சின்னத்திற்கான யோசனை, றொஷல் கனகசபேயின் வடிவமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும். இது தொற்றுநோயால் உயிர் இழந்தவர்களுக்காக உருவான முதல் டிஜிட்டல் நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அவரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நாம் மதுக ஜயலத்தின் இலங்கை மாகாண மாவட்டங்கள் நகரங்கள் என்ற தரவுத்தளத்தைப் பயன்படுத்தியும் அதற்கு தரவைச் சேர்த்தும் வருகிறோம்.

தரவு உள்ளீடு, நகல் எழுதுதல், மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு வழிகளில் இவ்வளர்ந்து வரும் பட்டியலில் உள்ளோர் உதவி கரம் நீட்டியுள்ளனர்.

  • றொஷல் கனகசபை
  • பிறன்க்லின் சமிந்த
  • அமலினி டி சாய்ரா
  • ஜைனாப் இப்ராகிம்
  • துவிந்தி இளங்கோன்
  • நபீலா இக்பால்
  • ஷே. கோ.
  • பூசதி லியனாரச்சி
  • மஹஸ் முர்ஷிட்
  • சச்சினி பெரேரா
  • நெத்மி ராஜவஸம்
  • சிந்து ரத்னராஜன்
  • வயங்கனா சில்வா
  • அபிநயா ஶ்ரீதரன்
  • சவின்த்றி தல்கொடபிடிய
  • வீ. ஜீ. தேவன்
  • பமோடி வராவிட
  • சரிகா வருசவிதாரண
  • நிறான் விரசிங்க
  • பிரனித் விரசிங்க